தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 225

ஆறுமோ ஆவல்

ஆவல்
வார்த்தைகள் அற்றது
மனதுக்குள் திளைப்பது
ஏக்கங்களின் பெருமூச்சுகள்
எண்ணத்துடன் வெளிவருவது

எண்ணங்களின் தூண்டல்கள்
எழுந்திடும் ஆசைகள்
எண்ணுபவை நிரைவேற
ஏற்றமுள்ள எதிர்காலங்கள்

வதைத்திடும். தவிப்புக்கள்
வாஞ்சை தரும் காத்திருப்புகள்
அவனவனின் கற்பனையிலே
அவதரிக்கும் உருவகிப்புகள்

சிந்திடும் கண்ணீரும்
சினந்திடும். வெறுப்புகளும்
புரிவது இல்லை
புவிக்கு பொறுத்திட்ட
ஆவல் என்று !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan