22
May
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
சக்தி சக்திதாசன்
கனவுகளில் வழிமாறிக்
கானகத்தில் தடுமாறி
புனலாக ஓடும் காலத்தில்
புயலோடு தொலைந்து போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
பொய்க்கால் குதிரையிலே
போகாத ஊருக்கு
போய்ச்சேரப் புறப்பட்டு
புதை சேற்றினுள்ளே
புதைந்தே போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
உண்மையில்லா உலகில்
உண்மைகளின் ஊற்றைத் தேடி
உதவாத யாத்திரையில்
உருமாறிப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
கண்ணிருப்போர் உலகினிலே
குருடனாகிப் போய்
பேசத் தெரிந்தோர் புவியில்
ஊமையாகப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
உடலில் வலு உள்ளவரை
உழைத்து உழைத்து
நெஞ்சில் ஒரு துளி
ஈரமில்லா மனிதருக்கு
வாரி இறைத்து விட்டு
கல்லறை வாசலில்
காத்து இருக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
என்னைத் தேடும் உயிர்கள்
ஏழுலகிலும் இல்லையென்றே
எனை நானே தொலைக்கவென்று
விலாசமில்லாமல் வசிக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

Author: Nada Mohan
24
May
ஜெயம் தங்கராஜா
கான மயிலாட காணும் விழியாட
அழகாய் இறகாட மயங்கி உயிராட
களிப்பால் அதுவாட...
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...