சக்தி சக்திதாசன்

“சிரிப்பு”
சந்தம் சிந்தும் சந்திப்பு 247

சிரிப்பு என்றொரு சினிமா பாட்டு
சிந்தையில் வந்தால் சிரிப்பு வரும் தானாய்
கலை வாணர் கிஷ்ணணர் படத்து பாட்டு
அலை அலையாய் பல சிரிப்பை விளக்கி
அத்தனை சிரிப்பையும்
பாட்டில் ஒலித்து
சிரிப்பை தானே கேட்போர் காது
தெவிட்டத் தருமே அந்தப் பாட்டு
ஆணவ சிரிப்பு,சங்கீத சிரிப்பு
ஆனந்த சிரிப்பு அசட்டு சிரிப்பு
காதலி நாணும் வெட்க சிரிப்பு
கலகலப்பான கூட்ட சிரிப்பு
ஒப்புக்கு வாயால் ஒப்பிக்கும் சிரிப்பு
ஊளை சிரிப்பு,மரியாதை சிரிப்பு
என்றெல்லாம் பல வகை சிரிப்பை காட்டும்
இந்த பாடல் என்
நினைவில் இனிக்கும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan