சாளரத்தின் ஒளியினிலே..

சிவருபன் சர்வேஸ்வரி

சாளரத்தின் ஒளியினிலே..

சாளரத்தின் ஒளியினிலே வெளியே நோக்கினேன்

பூஞ்சோலையின் மலர்வினிலே மனதையும் செலுத்தினேன்

பலவண்ணச் சிட்டுக்கள் பூக்கள் மேலிருந்தன
தேனைச் சுவைப்பதற்கு பறந்து பறந்தே சுற்றின

சுதந்திரமான பிறவிகள்
கச்சிதமாய் திரிந்தன

கேள்வியும் இல்லை நினைத்ததும் நடக்குமே

வெளியே பார்த்த பார்வையிலே எண்ணமும்

சுழன்றன மனிதர்களின் சுதந்திரத்தின் தோற்றமதை

எண்ணியும் முடிக்கவும் முடியாத ஏழைகள்

இருந்தும் எடுக்கவும் முடியாத கைவிலங்கு

அடக்கியே வைத்து ஆசைகள் அழிவதெத்தனை

காணும் சுகங்களும் இன்றிக் கருகும்மலர்கள் எத்தனை

அலையலையாய் திரளும் கற்பனையை மெல்லவும் முடிவிட்டேன்.

-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading