சின்ன வயதில்

ராணி சம்பந்தர்

சின்ன வயதில் சீர் வரிசை
பென்னம் பெரிய பிணைப்பு
முன்னம் செய்த அருட்கொடை

அன்னமூட்டித் தானுண்ட தந்தை
கன்னம் நோகுமெனக் கண்ணுக்குக்
கண்ணாக அரவணைத்த அன்னை

சின்னக்குட்டி செல்லக்குட்டி எனத்
தூக்கிச் சீவிச் சிங்காரித்து நெற்றிப்
பொட்டும் விதம் விதமான உடுப்பும்

போட்டு அழகுபார்த்த அக்காமார்
இன்னுமென்னென்ன வேண்டுமோ
சொன்னவுடன் தோளில் சுமந்து

தென்னங்குரும்பையில் தேர் செய்து
ரயர் உருட்டி எங்கள் வீட்டு மகாராணி
எனத் தூக்கிச் சென்று விளையாடிய
அண்ணாமாரும் சின்ன வயதில்
எனக்குக் கிடைத்த பேரானந்தமே .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading