அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1884

கவிதை….!❤️

கவிஞன் ஒருவன்
கருவொன்று சுமந்து
கதையாக்கித் தந்திடும்
விதையென அதுவே பலர்
மனத்திடை நிலைத்திடும்
கல்லாக் கலையென்பர் சிலர்
கொல்லும் வலியும் கோடி
தொலைவில் செல்லும் எனில்
கவி சொல்லும் கவிஞன் பலர்
உளத்தை வெல்வான் என்பேன்
அழகுடைக் கவியென ஈங்கு
அளித்திடும் பொருள் நயம்
விழித்திட வைத்திடும் தினம்
விழி விலக்காது படித்திடவே
தூண்டுமே நம் மனம் கணம்
ஆதி இலக்கிய வடிவாய்
அன்று சங்க காலம் முதல்
யாப்பு மரபினில் கலந்தே
அந்நியர் வருகை பின்
நவீன கவியென உரை
நடையென பலவாகி
இன்று என் உளத்தாள்
நிறைத்து நின்றேகும்
கலை விலை இல்லை…❤️
சிவதர்சனி இராகவன்
15/10/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading