” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா.சிவதர்சன்

[ வாரம் 281 ]
“அதிரடி”

அதிகாரமிக்க ஜனாதிபதியும் அதிரடியாய் கைதாகலாம்
அதிரடி நிகழ்வுகளெல்லாம் இன்று சர்வசாதாரணம்
அரசும் அதிகாரிகளும் அதில் அங்கமாவதுதான் அதிசயம்
பொறுப்புக்கூறலிருந்தால் தானே இந்த அவலம்!

அதிகாரப்பரவல் எங்கள் அரசியலமைப்பிலுண்டு
சிங்களமே அரசகருமமொழி பௌத்தமே அரச மதம்
மூவின மக்களும் சகோதரராய் வாழும் மாயமான் கதை
அரசியலில் மூடிமறைத்தல்அதிரடியின் தோற்றுவாய்

அநாமதேய அதிரடிகள் அடிக்கடி வந்துபோகும்
வெறும் அறிக்கை போதும் அரசு அமைதிகாக்கும்
காலம் பொன்னானது அதிரடியோ மறந்துபோகும்
புதிய அதிரடிதோன்ற பழையது கிடப்பில்போகும்

இனப்பிரச்சனை, மனிதஉரிமை,அத்துமீறிய குடியேற்றம்
இவை அதிரடியாய் தீர்வுகாணும் முக்கியபிரச்சனைகள்
பொருளாதாரச்சூறையாடல்நாட்டையே விற்கமுனைதல்
மக்கள்வாழ வழியின்றி ஆட்சியாளர் தப்பியோடும் நிலை

அதிரடியாய் புதியன புகுத்தி,பழையன அகற்றும் சூழுரை
மூவினமக்களினதும் ஒன்றுபட்ட ஆதரவு அணிசேர
மாற்றமொன்று அதிரடியாய் நிகழுமென நம்புவோம்
அநுரவின்அதிரடியால் வெற்றிப்பயணம் வாழ்க!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan