நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
சிவா சிவதர்சன்
[ வாரம் 228 ]
“பசுமை”
கண்ணுக்கெட்டிய தூரம் பசுமைமூடிய வயல்வெளி அலைமேவும்காட்சி
கண்ணுக்கு குளிர்மையூட்டும் மனதுக்கு நிறைவூட்டும் பசுமையின்மாட்சி
காக்கும் கடவுள் திருமாலெனும் பசுமைமேனியன் உள்ளம் நிறைஆளும் ஆட்சி
பசுமை காக்கும் மருதநிலமகளின் பசிபோக்கும் மீட்சி.
கூடிவாழ்ந்த உறவுகளின் அவலந்தீர போராடி
மறைந்த மாவீரர்களின்புகழை வரலாறு சொல்லும்
தனிமனிதர் சுதந்திரமும் கிட்டவில்லை இனத்தின் விடுதலையும் எட்டவில்லை
விழுப்புண்களும் வீரவடுக்களும் இன்றும் பசுமை நினைவுகளாய் நெஞ்சில் அலைமோதும்
அடிமனதில் எரியும் சுவாலை இன்னும் அணையவில்லை
மீண்டும் பற்றியெழ வெகுநேரமும் தேவையில்லை
முன்னோர் வாழ்ந்த அந்த அமைதி நிலை மீண்டும் உருவாகவேண்டும்
அந்நியர் தம் ஆக்கிரமிப்பில்லாத ஆட்சியிங்கே நிலவவேண்டும்
மனுநீதிபோற்றும் செங்கோல் இங்கு ஆட்சிபீடம் ஏறவேண்டும்.
பசுமைமிகு நாடென எம்நாட்டை பாரோர் புகழவேண்டும்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.
