சூரன்போர்

சிவதர்சனி இரா

வியாழன் கவி 2055

சூரன்போர்..

ஆறு நாட்கள் விரதம் இருந்து
அதர்மம் அழித்து தருமம் காத்த
அழகன் முருகனை வணங்கி
அல்லல் போக்கும் கந்தசஷ்டி..

பார்வதி மைந்தனாம் அழகனே
போர் புரிந்து சூரன் அவனை
சேவலும் மயிலுமாய் ஆக்கினான்
சேதியும் சொல்லும் கந்த சஷ்டி..

மயில்மேல் ஏறி உலகம் சுற்றி
ஆறுபடை வீடமர்ந்த முருகனே
தமிழ்க் கடவுளாம் வணங்குவோம்
மகிமை செப்பும் கந்த சஷ்டி..

குழந்தை வரம் வேண்டியே
குணமது பொறுமை காத்து
சஷ்டியிலே இருந்திடவே அகப்பையில்
வருமென்ற வாக்கு பலிக்கும் கந்த சஷ்டி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading