பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

அதிரடி

ஆதிரடி ஆட்சிச்
சட்டம்
அண்டைய நாடும்
நாட்டம்
ஆளுமை ஆடிய
ஆட்டம்
அங்கும் இங்கும்
ஓட்டம்

குற்றம் புரிந்தால்
தண்டனை
குத்தும் வெட்டும்
வேதனை
கும்பலாய் அதிரடி
சோதனை
கூட்டாய் மூடிட
நிபந்தனை

தலையிடம் மாட்டிய
காரும்
சிலைபோல் நிற்கும்
நிலையும்
விலையில் சிக்கிய
பொருளும்
வலையில் மாட்டிய
மீனாய்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading