செல்வி நித்தியானந்தன்.

மாசி

மாசி பனியும்
மூசி பெய்யும்
தூசி வந்தும்
நாசி அடைக்கும்

மாசி மகமும்
மகிழ்வுற வரும்
நேசி அகமும்
தூய்மை பெறும்

மாசி வந்தால்
பெற்றவர் பிறப்பு
மனையிலே வந்திடும்
இணைவும் சிறப்பு

செல்வி நித்தியானந்தன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading