ஜெயம் தங்கராஜா

எதிர்ப்பு அலை

அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையது

சதிகாரக் கும்பலின் முடிவு நிலையிது

சூழ்ச்சியால் வந்த ஒர் ஆட்சி

வீழ்ச்சியைக் காணும் ஓர் காட்சி 

குள்ளநரிகள் குதித்தே கும்மாளம் போட்டன

வெள்ளை மனங்கொண்டதாய் தங்களைக் காட்டின

சர்வவல்லமை பொருந்தியவரென பெயரும் சூட்டின

சர்வாதிகாரத்தாலே தம் ஆட்சியை ஓட்டின

நாளடைவில் தானே மக்களுக்கும் புரிந்தது

பாழடைந்த வாழ்க்கை யாராலென்று தெரிந்தது 

கலைக்கவே நரிகளை களைத்தவர் போராட்டம் 

நிலைக்கவோ நரிகளும் அரசியல் சூதாட்டம் 

ஊளையிட்டு மக்களை ஏமாற்றியது அந்தக்காலம் 

கோளைகளில்லை மக்களென்றுமென எடுத்தார் புதியகோலம்

வாழ்வதற்கு வழியில்லாமல்ச்செய்த அரசை துரத்தவே

ஆள்வதற்கு அருகதையான தலைவர்களை இருத்தவே

ஜெயம் 

14-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading