காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026 உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா உன்னதமாய் தொடங்குதுஇன்று நான்காண்டிற்கு...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி முதல் ஒலி உறவுகள்
தங்கசாமி தவக்குமார் 20.04.2023

புலம் பெயர் உறவுகளை
தக்கப்படி சேர்த்து கோர்த்து
FA முகமாய் மலர்வு கண்ட
முதல் ஒலி உடகமாம்
London Tamil வானொலியே
நம் முதல் ஒலியே

தாய் மொழி காவி
தளர்விலா பணி நகர்வில்
பல பக்கப் பார்வையிலே
பரிணாமம் கொண்டு
பவனிவரும் நம் ஒலியே

அன்று தொட்டு இன்று வரை
இணைவு கண்டு
நீங்காத நினைவலைகளை
மீட்டி பார்க்கும் நிகழ்வாய்
ஓர் மகுடம் முதல் ஒலி உறவு

மான்புமிகு அதிபர் பணிக்கு
ஆரவார ஆனந்த படிவு
அற்புதமாய் வார 11ஐ
கண்டிருக்கும் மலர்வுக்கு வாழ்த்து

தொகுத்து தரும் தூரிகைக்கு
மன மகிழ்வாய் வாழ்த்தும் நன்றியும்

வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே
27/04/2023

கள்ளமில்லா உள்ளம் கொண்ட
வள்ளல் ஆனவர்
மாசுபடா உறவு தனை
வாரி கொடுப்பவர்

நாளை வரும் பொழுதுகளை
மறந்து என்றுமே
புத்தம் புது மலர்களை போல்
பொலிவு கொண்டவர்

அடம் பிடிக்கும் ஆற்றலோடு
பிறர் மனதில் வாழ்பவர்
என்றும் இவர் இறை ஈர்ந்த
வளர்ந்த குழந்தைகள்
நம் கைகளிலே தாங்கி
கொள்ள வலிமை வேண்டுவோம்
அவர் வலிமை வேண்டுவோம்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading