திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும் மாந்தர்கள் நாம்

நோயும் பிணியும் தொடமுன்னே
அழகாம் நொடிகளை ரசித்தெழுதி
அன்பின் கலப்பில் உணர்விழைய
அகத்துள் உறவை வளர்த்தோமா

நிலையா வாழ்வை நிலையென்று
நிமிடமும் உழைத்து ஓடாக- பிறர்
வாடிட வதங்கிட எம் பணப்பை
நிறைக்க ஓடிய மனிதர்கள் நாம்

அழையாத் தோழர்கள் அடிவருட
அனைத்து நோய்களும் அடிமை கொள்ள
விட்டவை தொட்டவை துயரெழுதி
துடித்தே மாள்வது சரிதானோ

திசையும் திருப்பமும் கணங்களுள்ளே
திருடிட முன்னே வனப்பிடுங்கள்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading