திண்டாடும் மே தினம்

இது மாந்தர் கொண்டாடும்
தினமே அன்றித் திண்டாடும்
கறுப்பு நாளே மே தினமாகும்

எழுதத் துடிக்கும் எழுத்துக்கள்
எழுதமுடியா தவிக்கும் வலிகள்
மரத்துப் போன கை சோர்வுகள்

வேலை வேலை என வேலை
வாங்கிச் சுமந்து சுட்டெரித்த
உணர்வுகள் ஊமைப் பசிகள்

ஏனிந்தப் பரிதாப வாழ்வு பாரினில்
காணுமிந்த முதலாளி வர்க்கமே
ஏமாற்றிப் பிழைத்த சொர்க்கமே

வினாவினால் பதவி பறி பறிபோக
பணம் முணுமுணுத்தால் குறியாக
அதோ கதி அந்தோ பரிதாபமாகும்

கொழுத்த நண்டு பழுத்த காய்கள்
தொழிலாளியை விழுங்கும் பெரு
மலைப் பாம்புகளே முதலாளிகள்
உளுத்துப்போன மே தினமதில் .

Nada Mohan
Author: Nada Mohan