தியாகச் சுடர்-2065 ஜெயா நடேசன்

யாழ் ஊரெழு பெற்றெடுத்த
தியாகச் சுடர் நல்லூரில் திலீபன்
ஈழப் போராட்ட திறன் வீரன்
தேசம் விடிய தேசீயம் வாழ
கோரிக்கை ஐந்தினை முன் வைத்து
பன்னிரு நாட்கள் உண்ணா நோன்பிருந்து
அகிம்சை வழியினில் புரட்சியானது
தேச பக்தனின் சாதனை சரித்திரமானது
புரட்டாசி 26ல் உயிரும் ஊசலாடி மறைந்தது
அகிலத்தில் அழியாப் புகழாகி பெயராகி
அன்பைக் கொட்டி பலரை அழ வைத்தது
மண்ணின் மைந்தனாக உள்ளமதில் பதிந்து
சாதனை படைத்து சரித்திர மைந்தனாக
புகழ் பூத்த மலராக தியாகச் சுடர் ஆனார்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading