தியாக தீபம்…

சிவதர்சனி இராகவன்

தியாக தீபம் இன்னும்
அணையவில்லை…!!

ஊரெழு மண் உதித்த
உத்தமனே திலீபா
நீராகாரம் தன்னும் நீ
அருந்தா பசித்திருந்தாய்
ஒன்றா இரண்டா பன்னிரு
நாட்கள் உன் உடல் மெலிய
உயிர் உருக நீ விழித்திருக்க
ஊரே உன் முன் திரண்டிருக்க
எத்தனை உள்ளங்கள்
கண்ணீர் வடித்தது அன்று..

நல்லை நகர் வீதியில்
நல்லூரான் பார்த்திருக்க
மெழுகென உருக்கினாய்
மேனி வாடியே துவண்டது
அஹிம்சை வழி வெல்லுமென
அனைவரும் உனைப்போல்
நம்பிக்கையோடே இருந்தோம்
காந்தி தேசம் இன்றும் அச்
செயலுக்காய் கூனியே நிற்க..

பார்த்தீபன் உன் கனவு
பலிக்காமல் தான் போகுமோ
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்
மக்கள் புரட்சி எம் இலக்கை
இலட்சியத்தை வென்றெடுக்கும்
என்ற உன் எண்ணம் தோற்காது
பார்போற்றும் தியாக தீபமே
இன்னும் நீபசியோடிருப்பது
நாம் அறியாததல்ல
ஓர் நாள் உன் தியாகம்
வெல்லும் தேசம் விடியும்…

கிழக்கே உதயம்
மாறவா போகுது- கதிரவன்
ஒளியைக் கையால் தான்
மறைக்கமுடியுமா? அன்றிக்
கொடு நெஞ்சர் ஆட்டம்
தொடர்ந்தே தான் இருக்குமா
உன் வழி தொழுகிறோம்
உயிர் தியாகம் வியக்கிறோம்
மூபத்தொடு ஏழு முடிந்தாலென்ன
தேசத்தாய் விடியல் விரைவிலே..!!

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading