திருமணமாம்

மதிமகன்
பெற்றோர் பார்த்த திருமணமாம்
பேசிச் செய்த ஒரு மணமாம்
மற்றோரும் அதற்குச் சம்மதமாம்
மணவறையில் தான் அறிமுகமாம்!

வாழப்போவது ஏனோ இருவருமாம்
வழிமுறை வகுப்பது உறவினராம்
ஆளப்போவ தவர் அன்னையராம்
அண்ணியர் சிலரும் அடக்குவராம்

நாட்டிற்கு நாடது வேறுபடுமாம்
நாகரிகம் முன்னேற ஊறு படுமாம்!
பேட்டுக்கு பேடும் சரிவருமாம்
பேதமை என்றால்,நகை வருமாம்!

செயற்கை புத்தி என்ன தருமோ!
செத்தவரை எழுப்பி சேர்த்து விடுமோ!
இயற்கை வழமையும் தகர்ந்து விடுமோ!
இனியும் திருமணம் வாழ்ந்து விடுமோ!

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading