திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே

கவி 721

திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே

இவர்களின் உலகம் எவர்க்கிங்கு தெரியும்
இவர்களின் திறன்கள் யாருக்கிங்கு புரியும்
தனித்துவமான மன உணர்வினைக் கொண்டு
தனிப்பட்ட திறமையால் மிளிர்கின்றார்கள் இன்று

கொண்டாலே ஆர்வம் ஒரு துறையில்
கண்டும் விடுவார்கள் கரையினை நிறைவில்
இறுகிய மதியும் இழகியே உருவாக்கியது
சுருங்கிய மனதும் சிந்தனையை கருவாக்கியது

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்து
சொல்வதில் கொஞ்சம் பிடிவாதத்தையும் சேர்த்து
ஒன்றையே மறுபடியும் செய்தாலும் அருமை
ஒன்றுக்கு மேற்பட்ட திறன்களினால் பெருமை

அபாரமான ஞானம் உடையவர்களென்பது உண்மையே
விவரமான குழந்தைகளிவர்கள் இவருலகம் மென்மையே
ஊக்கங்களோடு ஏக்கங்களின்றி பூத்துவிடும் பூக்கள்
தேக்கியே திறன்களை காவிச்செல்லுமே நாட்கள்

ஜெயம்
24-04-2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading