தீதும் நன்றும்

சர்வேஸ்வரி சிவருபன்

தீதும் நன்றும்

ஆயிரம் பொய்பேசினாலும் நன்மை செய்துவிடு
ஆபத்து இல்லாத வழிமுறையில் நின்றுவிடு
தீமையைக் கண்டதும் பயந்தும் போகாதே
தீமையை சாய்க்கும் செயலில் இறங்கிவிடு

வளத்தைப் பெருக்கவும் தீதும் வந்து கெளவும்
தீரமாக முயற்சியினால்
முன்னேறிக் கொள்வாய்
ஒன்றையிழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும்
தீதுமே நன்றாக அமையும் ஓர்நாள்

வாழும் போதினிலே எத்தனை மாற்றம்
மாற்றியும் அமைக்க எத்தனை திட்டம்
மறுக்க நினைத்தாலும் வெற்றிகொள்ள முடியாத நிற்பந்தம்
அகமும் புறமும் ஒன்றா கூறு

ஐயம் கொண்டால் அமைதி போகும்
இன்னல் வந்தால் மகிழ்வு போகும்
எதையும் தாங்கியும் நிற்கும் போதிலே
எல்லாம் நன்மை என்றே கொள்வோம்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading