தீர்ப்பு

நேவிஸ் பிலிப் கவி இல(586)

வலியோருக்கு வசதியாய்
வளைந்திடும் தென்னங் கீற்று
விவாதிக்க ஆளில்லை இயேசுவுக்கு
அதனால் சிலுவைத் தீர்ப்பு
மேல் முறையீட்டுக்கு கதவுகள்
அமைக்கபடாத கறுப்பு தீர்ப்பு

வறியோரின் வழக்கு என்றால்
நீதி மன்ற வாதத்திற்கு
வந்து விடும் முடக்கு வாதம்

பொய்சாட்சி சொல்ல வரிசையிலே
வாடகை மனிதர்கள் நிற்க
நீதியின் கண்களை கட்டிக் கொண்டு
கண்துடைப்பு விசாரணைகள்

விசாரணைக்குப் பின்பு
தீர்ப்பு எழுதுவது நடைமுறை
இயேசுவின் வழக்கில் தீர்ப்புக்குப் பின்
கண்விழிக்கும் விசாரணைகள்

பகலவன் ஒளியிழக்க
வானவர் கண்கலங்க
கல்வாரியின் காட்சியில்
அன்பின் உருவம் கிழிந்தது
நம் பாவம் சுமந்த தோள்கள்
வளைந்தன சிலுவையிலே
நன்றி,,,,,,,,,,,

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading