துறவு பூண்ட உறவுகள்

ஜெயம்
ஜெயம்
ஜெயம்

ஜெயம்
ஒரு காலத்தில்
உறவுகள் எனக்கு உயிர்
அவர்களின் சிரிப்பே என் சுவாசம்
பாசம் பொங்கிய வார்த்தைகளில்
என் உலகம் முழுதும் நனைந்திருந்தது

காலங்கள் மாறியது
பாசம் என்ற பெயரில்
பிணைப்பு கயிறுகள் அவிழ்ந்து கொண்டன
அன்பு சொல்லியவர்களே
அந்நியமாகி சென்றனர்

உறவுகள் இருந்தன
ஆனால் பிணைப்பு இல்லை
கண்ணீர் விழிகளில்
உள்ளத்துள் இரணங்கள்
உறவுகள் என்றால் உண்மையா
பழகியதும் பொய்யா

அன்பைத் துறந்து
துறவு பூண்ட உறவுகள்
விலகல்
எனது புதிய உறவு அமைதிதான்
துறவு என்றால் ஓட்டமா

Author:

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading