ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

துறவு பூண்ட உறவுகள்…விண்ணவன் – குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர்
வழிகிறது – நெஞ்சமோ
ஆறுதல்தேட ஒரு தோழ்
கிடைக்காதா என ஏங்கிடும் நிலை

வார்த்தைகளில் நம்பிக்கை தந்து
இறுதியில் கைவிட்டுவிட்டு
செல்லும் சில
உறவுகளை நான்
என் சொல்லட்டும்

உறவுகளை உடனிருக்க
நிர்பந்திப்பதா இல்லை
விலகி செல்ல இடமழிப்பதா
புரியவில்லை

இக் கலக்கத்திலே
நானோ தள்ளாடிக்
கொண்டிருக்கும்
தருமோ துறவு பூண்டு
சென்றனவே சில உறவுகள்….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading