தெரிந்து கொள்ள முடியா மனம்

ராணி சம்பந்தர் எத்தனை தரம் நடந்து நடந்து கடந்தாலும் ஒருபோதுமே அண்டவெளியை அளக்க முடிவதில்லையே இத்தனை மாந்தரைப் பற்பல தடவை வாழ்வில்...

Continue reading

தெரிந்து கொள்ள முடியா மனம்

ராணி சம்பந்தர்

எத்தனை தரம் நடந்து நடந்து
கடந்தாலும் ஒருபோதுமே
அண்டவெளியை அளக்க
முடிவதில்லையே

இத்தனை மாந்தரைப் பற்பல
தடவை வாழ்வில் சந்தித்தும்
நெஞ்சில் என்ன இருக்கிறது
என இயந்திரங்கள் எதிலுமே
அது தெரிவதில்லையே

நிலை மாறும் உலகில்
அலை பாயும் மனதில்
வலை பின்னும் மூளை
குதப்பி கலையும் கனவு
கூடப் புரிவதில்லையே

சோகம் ,மகிழ்வு என்று
அனைத்தும் ஆராய
அத்தனையிலும் நீண்ட
பெருமூச்சுக் கூடத்
தங்குவதில்லையே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading