தொடர் நவீனங்கள்..

வசந்தா ஜெகதீசன்
தொன்மை துலங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி
தொடரியல் வாழ்வின் அழிவற்ற சாட்சி
முந்தைய வாழ்வின் முதன்மைச் சாட்சி
முதற்குடி என்பதன் உலக அத்தாட்சி

இன்றைய சூழலும் வளர்ச்சியின் புரட்சி
வருங்கால எழுச்சிக்கு ஆதார அத்தாட்சி
மாற்றத்தின் திறவுகோல் மனிதத்தின் ஏணி
மனிதத்தின் நேயத்தை மாசற்றுக் காப்போம்
உலகியல் உதயத்தின் தமிழே வாழ் நீ
வளமிக்க மொழியின் வரலாற்றுப் பதியம்
நவீன வளர்ச்சிக்குள் வற்றாத சுரங்கம்
திருக்குறளாய் தேசமெங்கும்
பரவிடும் தேட்டம்
ஆதியின் மூலமாய் அனுதின வேகமாய் வென்றுயர் தமிழே
வீரரின் ஏந்தலாய் வெற்றியின் மகுடமாய் நவீனம் சூடிடு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading