நகைப்பானதோ மனிதநேயம்

செல்வி நித்தியானந்தன்
நகைப்பானதோ மனிதநேயம்

எள்ளியும் நகையாடியும்
எரிச்சல் பலஊட்டியும்
எப்டுத் திசையெங்கும்
எண்ணிலடங்கா துயரே

மனிதநேயம் மடிந்தும்
மண்ணுக்குள் புதைந்தும்
மனமதை கல்லாக்கியும்
மரமாகிய நேயமும்

பணத்தை சேமித்தும்
பலநாட்டில் தேக்கியும்
பற்பல அட்டூழியம்
பாரினில் நடந்தும்

பேரிடர் என்றதும்
பேணிய செல்வமும்
பெருஉதவி செய்ததும்
மெச்சுதே மனிதநேயம்

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading