நகைப்பானதோ மனித நேயம்?

நகுலா சிவநாதன்
நகைப்பானதோ மனித நேயம்?

நகைப்பானதோ மனித நேயம்
நாளைய உலகில் வியப்பானதோ?
நீரில் அவலத்தில் நீந்திடும் உறவுகள்
வேரின் அழுகுரலாய் வெந்தணல் வேதனையில்

கடும்மழை பொழிந்து காடுமேடு உடைவு
கனமழை நீரில் வாழ்வின் அவலம்
மனித நேய உதவி விரைந்து வந்தாலும்
வழங்கலும் வலிகளும் போதாதவையே!

நகைப்புக்கு இடமேது இன்று
நலிவுற்ற மக்களை காத்திட எழுவோம்
மனித நேய உதவிகள் ஆற்றி
மாண்புடன் காப்போம் தாயக உறவுகளை

நகுலா சிவநாதன் 1833

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading