நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365

நடிப்பது மானிடம்..!!

செய்வதெல்லாம் செய்துவிட்டு
பொய் தான் உரைத்திடுவார்
போதுமென்ற அளவிற்கு
நாடகமாய் நடித்து வெல்லுவர்

பச்சைப் பிள்ளை போலும்
முகமதை வைத்துக் காட்டி
வித்தை செய்யும் மானிட நட்பு
புரிந்துவிட்டால் பிரிவது தப்பு அல்ல

கயவரின் குணமதைக் காலம்
முயற்சியோடு தெரிய வைக்கும்
தெளிந்து விலகும் நட்பும்
துணிந்தே வாழத் தலைப்படும்
சிவதர்சனி இரா
9/7/2026

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading