நட்பென்றாலே…

வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே…
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே எங்கள் மனத்தின் துணை.

தவறுகள் வந்தால் சண்டையுமாகும்
அதற்குள்ளே கூட அன்பே ஆளும்
கோபம் கூடி பிரிவில் இல்லை
நாள்கள் மாறினும் நட்பு மாறாது,
தூரம் இருப்பினும் நினைவுகள் குறையாது.
இதயம் முழுதையும் ஆளும் முத்து
பரிவு பாசம் பழகிய வலிகள்
நட்பின் செறிவில் நம்பிக்கை வரங்கள்
நல் நட்பு என்றும் குன்றில் விளக்கு
நானிலம் போற்றும் நட்பின் மதிப்பு!

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading