நட்பென்றாலே

நட்பென்றாலே

உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு

எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு

ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு

உயிர்காக்கும் தோழமையில் உசிராக நடைகொண்டு

நாடொப்ப நேசமது நாளும் தொடர்ந்துகொண்டு

நட்பென்றாலே என்றும் நயமாக இருந்துகொண்டு

சாற்றும் திருவிளக்காய் ஒளியும் வீசிக்கொண்டு

ஆற்றலும் தூண்டும் நட்பென்ற பேர்கொண்டு

விலகாத தொடர்பு விரும்பியே சென்றுகொண்டு

இனிமையான உறவாய் என்றும் நின்றுகொண்டு

தாங்கும் தோளாய் தோள்கொடுக்கும் தோழமைகொண்டு

துரோகமின்றியே விசுவாசம் பெருகிடவே வாழ்தலே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading