நம்பிக்கை..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2191!!

நம்பிக்கை ..!!!

ஆயுதமா ஆணி வேரா அன்பா
அல்லது அரவணைக்கும் கையா!
பலம் சேர்ப்பதா பலவீனமா
புலன் ஈர்ப்பதா அக அத்திரமா!!
நட்பின் வடிவமா நலம் தருவதா
நா நிலம் வேண்டுவதா நல்லதா!!பிறப்பில் கூட வந்ததா அன்றி
இறப்பினை விரட்டுவதா இயல்பா!!
இயற்கை தந்த மதியா அல்ல
இறைவன் வகுத்த விதியா!!
உறவாய்க் கூட வருவதா
உயர்வை எட்ட வைப்பதா இன்னும்
உள்ளம் வேண்டி நிற்பதா
உலக விதியை மாற்றுவதா!!
ஐந்தாம் அறிவின் உணர்வா
ஆறாம் அறிவின் உராய்வா!!
நிம்மதி தொலைப்பதா
நித்திய அமைதி காப்பதா
கதிரவன் போன்றதா இல்லை
கடும் புயல் ஒத்ததா இன்னும்!!
யாரறிவீர் யாதுரைப்பீர்
ஏது வாழ்வின் பயணத்தில்
நம்பிக்கை ..இருள் தருமா?

சிவதர்சனி இராகவன்
14/8/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading