30
Sep
நேவிஸ் பிலிப் கவி இல(665)
முதுமை என்பது அனுபவம்
கடந்து வந்த பாதையை
அறிவோடு பார்த்து நடப்பது
முதுமையின்...
30
Sep
நம் வாழ்வின் வேர்கள்-2397
நீர் தேடி ஓடும் வேரைப்போல,
நாம் பேர் தேடி ஓடுகின்றோம்;
மூத்தோர் தந்த சீர்மிகு பெயரில்
சிறப்பதுவே...
30
Sep
நம் வாழ்வின் வேர்கள்
ராணி சம்பந்தர்
கூட்டுக் குடும்பமுடனேயே
குதூகலமாய் வாழ்ந்திடவே
முதுகெலும்பான முத்துகள்
கட்டுக்கடங்காத காளையரை
அடக்கி பழக்க வழக்கம் நாட்டி
கலாச்சாரம் கெட்டுப்போகாது
கட்டிக்காத்த...
“நம் வாழ்வின் வேர்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல(665)
முதுமை என்பது அனுபவம்
கடந்து வந்த பாதையை
அறிவோடு பார்த்து நடப்பது
முதுமையின் விவேகம்
முதுமை எழுதி முடித்த காவியம்
படிப்பினை குறையா பக்கங்கள்
அவர்கள் கடந்த காலமல்ல
ஒன்றிப்பு வாழ்வின் பலமான வேர்கள்
நாம் போற்றி வாழும் முதியவர்கள்
பாசத்தால்அணைத்து ஒன்றாய்
பிணைத்து வைக்கும் வேர்கள்
அன்பெனும் நீரை ஊற்றி
வேற்றுமைதனையகற்றி
சுய நலச் சுவருடைத்து
ஒற்றுமை காத்தவர்கள்
விழாக்களின் மகிழ்விலும்
பாதிப்புக்களின் துயரிலும்
கை விடா துணையாய்நின்று
காத்திடும் வேர்கள்
அவர்கள் ஏற்றி வைத்த
குடும்ப விளக்கு
தலைமுறைகள் தாண்டியும்
ஒளிரும் நம் வாழ்வும் மலரும்
நன்றி,,,,..
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...