30
Sep
நேவிஸ் பிலிப் கவி இல(665)
முதுமை என்பது அனுபவம்
கடந்து வந்த பாதையை
அறிவோடு பார்த்து நடப்பது
முதுமையின்...
30
Sep
நம் வாழ்வின் வேர்கள்-2397
நீர் தேடி ஓடும் வேரைப்போல,
நாம் பேர் தேடி ஓடுகின்றோம்;
மூத்தோர் தந்த சீர்மிகு பெயரில்
சிறப்பதுவே...
30
Sep
நம் வாழ்வின் வேர்கள்
ராணி சம்பந்தர்
கூட்டுக் குடும்பமுடனேயே
குதூகலமாய் வாழ்ந்திடவே
முதுகெலும்பான முத்துகள்
கட்டுக்கடங்காத காளையரை
அடக்கி பழக்க வழக்கம் நாட்டி
கலாச்சாரம் கெட்டுப்போகாது
கட்டிக்காத்த...
நம் வாழ்வின் வேர்கள்-2397
நீர் தேடி ஓடும் வேரைப்போல,
நாம் பேர் தேடி ஓடுகின்றோம்;
மூத்தோர் தந்த சீர்மிகு பெயரில்
சிறப்பதுவே நம் பெருமையன்றோ?
வேரூன்றிய உலகில் நான் பார்க்கும்
போற்றுதலுக்குரிய இடங்களெல்லாம்,
மூத்தோர் பரம்பரையாய் வாழ்ந்த
மண்ணையும் பண்பாட்டையும் சொல்லுமே!
வேரறுந்து போகாமல்
நம் சந்ததியைத் தேடி இணைக்க வேண்டும்;
தேடித் தேடி முகவுரை கண்டெடுத்தால்
புதையலாகும் நம் வரலாறு!
பேரொன்று நமக்குத் தந்து,
பெருமையாய் உலகறியச் செய்து,
இருந்த இடம் தெரியாமல் இன்று
இன்னலுறும் நிலை ஏன் வர வேண்டும்?
நமக்குள் முகவரி இழந்துபோவது
நம் வரலாற்றின் முடிவுரையாகும்;
வேரைத் தேடி நின்றிடுவோம்—
வேரோடு வாழ்வதே நம் பெருமை!
சிவதர்சனி இரா
30/9/2026
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...