நம் வாழ்வின் வேர்கள்

நகுலா சிவநாதன்
நம் வாழ்வின் வேர்கள்

நம் வாழ்வின் வேர்கள் முதியோர்
நலமாக வாழும் வழிகாட்டி வேர்கள்
அனுபவ அறிவின் விருட்சங்கள்
ஆழமாய் ஊன்றிய வேரின் விழுதுகள்

வேர்களின் வலிமையிலே மரங்கள் தாங்கும்
அன்பின் வலிமையிலே நம்மைத் தாங்கும்
நம்பிக்கை நாற்றுகளின் ஊற்றுகள்
நாளைய உலகின் அனுபவ திரட்சி

முதுமை என்பது பெருமை
முளைக்கும் விதையை உருவாக்கியோர்
அன்பும் பண்பும் அகத்தில் ஒளிர
அடுத்து தலைமுறைக்கு எடுத்துக் காட்டியவர்

மண்ணில் புதைந்த வேர்களைப் போல்
மனதில் பதிந்த நட்சத்திரங்கள்
நம்மைக் காக்கும் உறவுகள்
நம்வாழ்வின் ஆணிவேர்கள்

நகுலா சிவநாதன் 1877

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading