நல்லுறவு 95

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-12-2025

தன்னலத்தை துரத்திவிட்டு
தயங்காது தோள்கொடு
சிறுதவறு செய்தாலும்
சீற்றத்தை தவிர்த்திடு

வேலிகளை நகர்த்திவிட்டு
வெளிப்படப் பேசிடு
மௌனத்தை கலைத்துவிட்டு மனம்விட்டு கதைத்திடு

கொடுக்கல் வாங்கலில்
நாணயமாய் நடந்திடு
திருமண பந்தத்தில்
இணைந்தே பயணித்திடு

நாமெல்லாம் ஒன்றுபட்டு
நல்லுறவைப் பேணிடுவோம்
நல்லுறவின் ஆணிவேர்
நாளெல்லாம் வளர்ந்திடும்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading