நாடகம் 87

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025

கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை கூறுவது நாடகம்!

சிரிப்பு, அழுகை , சோகம், கோபம்,
சிங்காரித்து சில பாத்திரமும்
திரைக்குப் பின் மறைந்தவையை
திறந்த அரங்கில் வெளிச்சமாக்கி

கதையை பலகோணமாய்
கண்டவரை நோகடிக்காமல்
கலை வடிவில் கருவை நிறுத்தி
காலம் கடந்து அறிவால் உணர்த்தி

நாடகம் வெறும் நடிப்பல்ல உணர்ந்து
நம் வாழ்க்கைப் பாடத்தை புரிந்து
உணர்வுகளை மொத்தமாய்த் திரட்டி
உணருகின்றேன் என்னுள்ளும் மாற்றம்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading