” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நினைவுகள் கனக்கிறதே

ரஜனி அன்ரன் ( B.A) “நினைவுகள் கனக்கிறதே” 27.11.2025

தலைகுனிந்த எம்மினத்தை
தலைநிமிரச் செய்து தன்மானத்தோடு நாம்வாழ
தம்முயிரை ஈகம்செய்த தேசமறவர்களின்
தியாகநினைவுகள் நெஞ்சோடு கனக்கிறதே
நினைவுகளும் மலர்கிறதே !

தமிழ்வாழ இனம்வாழ
தம்முயிரைக் கொடையாக்கி
உடலை வெடியாக்கி உணர்வைப் பொறியாக்கி
வித்தாகிப் போனவரின்ஒலி
மண்ணின்மார்பில் வலியாகத் துடிக்கிறதே
விண்கூட மழைப்பூவைச் சொரிகிறதே
கண்களில்நீரும் பனிக்கிறதே !

காற்றிலும் சேற்றிலும் கடுங்குளிரிலும்
ஊற்றாகிப் போனவரின் உயிர்த்தியாகம்
இனத்தின்அரணாக இன்னும் உயிர்ப்போடுதான்
மண்ணில் விழுந்த உம்வேர்கள் மரபாக உயர்கிறது
நாளைஎழும் தலைமுறைக்கும் அறமாக உரைக்குமே
எல்லைகள் கடந்தும் எம்உணர்வோடு கலந்துவிட்ட
உன்னதர்களின் நினைவுகள் கனக்கிறதே மனசெல்லாம் !

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading