நிழலாடுதே நினைவாயிரம்

செல்வி நித்தியானந்தன்
நிழலாடுதே நினைவாயிரம்

நினைவென்னும்
நிழலாடும் புத்தகம்
நித்திய சேமிப்பில்
நின்றாடும் சரிதம்

சோகமும் மகிழ்வும்
பங்கேற்ற
தாகமாய் எப்போதும் மனதும்
கரைபுரளும்
பாகமாய் பலதும்
பழியுடன் வந்திட
வேகமாய் விரட்டியே
விரும்பிச் சென்றிட

தாயினது மறைவு
தாங்கமுடியா சோகம்
தந்தையின் இறப்பு
தனித்ததே குடும்பம்

பசி பணம் பரிதவிப்பு
பக்கபலம் யாருமில்லை
படிப்பு துணகொண்டுதான்
பாதிவ்ளம் வென்றோமே!

செல்வி நித்தியானந்தன்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading