நிழலாடுதே நினைவாயிரம் 83

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-01-2026

காலங்கள் கரைந்த பின்பும்
கரையோரம் ஒதுங்கும் சுவடாய்
நிமிடம் தோறும் நெஞ்சில்
நிழலாடுதே நினைவாயிரம்

குடை மடித்து மழையில் நனைந்ததும்
குதுகலமாய் சுற்றித் திரிந்ததும்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்ததும்
பாசமாய் வலம் வந்ததும்

தடுக்கி விழும் முன்னே
தாங்கிய உங்கள் கைகளும்
தனிமையை உணர்ந்ததில்லை
தமையனே உன் அரவணைப்பில்

தோல்விகள் எனை நெருங்கையில்
தோள் கொடுத்தவனே
காலனும் கவர்ந்து சென்றானோ
கனிவான அந்தச் சிரிப்பை

தந்தை பாதி, தாய் பாதியாய்
தன்னலமற்ற அன்பின் உருவமாய்
நெஞ்சம் கனக்கும் நேசமாய்
நிழலாடுதே நினைவாயிரம் அண்ணா!

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading