நிழல் தேடும் வேளை….!

நிழல் தேடும் வேளை

உச்சி வெயில் கணகணக்க
உச்சம் தொடும் வெப்பமே!
பச்சை மரம் இலை விரிக்க
பக்கத்துணையாகும் நிழலே!

நிழல் தேடும் வெளையிது
நிஐமான உண்மையிது
தணலாக வெப்பமும் தாக்குது
தடல் புடலாய் நீர்நிலை தேடுது!

உறவுகள் வெப்பத்தால் துடிக்கிறார்
உணர்வுகள் உறுதியை இளக்குது
கனலாய் எறிக்குது வெப்பமும்
கானலாய் காட்டுது காலமும்!

நிழல் தேடும் மனமும்
நிஐம் காணும் வாழ்விலே!
தணல்போல வெயிலும்
தணியாத புவிமேலே!

நகுலா சிவநாதன் 1861

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading