நிழல் தேடும் வேளை

தவக்குமார்

ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு வரவு நம் பாதைகளில்
நிறையும்

உச்சி முதல் புழுதி தொடும்
பாதம் வரை கொதிக்கின்ற குருதி
நிழல் கண்ட வேளை
அறு சுவையை மிஞ்சும்
விருந்தாக மாறும்

தாய் மண்ணை துறந்து
சுற்றங்கள் துலைத்து
நகர்வு காணும் வாழ்வில்
நாம் தேடும் நிழலாய் நம்
உறவுகளும் தொடர்ந்தால்
நலமான வாழ்வு நம்மோடு இணையும்!!!

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading