நேர்த்தியாய் நானும் யார்? 728

செல்வி நித்தியானந்தன் 11.09.2025
நேர்த்தியாய் நானும் யார்?

உருண்டை நீளமாய்
வடிவம் பெற்றாய்
உள்ளே அமிலமாய்
ஊற்றும் கொண்டாய்

பாரசீகம் காப்பிலி
பாலைவனம் கொடிபெயராய்
பார்த்தாலே தாகத்திற்கும்
பழமாய் காயாய்பயனாய்

உயிர்சத்து சியாகவும்
உணவுக்கு சுவையாகவும்
வண்ணத்தில் இரண்டாய்
வலம் வருகிறாய்

வெப்பவலய பயிராய்
வேலியின் பாதுகாவலாய்
வேண்டுதலுக்கு நீயாய்
வேறூன்றி உள்ளாயே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading