பசுமை

வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும் படரும்
புவிமகள் செப்பும்
தருக்களும் தளிர்க்கும்
தகமையில் தரணி
தன்னிலைக் கோலம்
தருமே சுகம்
பார்வைக்கு எழிலாய்
பசுமை உலகாய்
பூக்கும் புவியே
புத்தொளிர் எழிற்சி
புன்னகை மலர்ச்சி
எங்கும் பசுமை
ஏற்றத்தின் தகமை!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading