மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

பசுமை -72

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025

பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச காற்றை சுவாசிப்பது நன்று

பசுமை மறந்து வாழ்ந்தவன்
பசிக்கு உணவு மாத்திரை
நிலைமை புரிந்து கொண்டவன்
நித்தம் வளத்தை காக்கிறான்

அழிவை நிறுத்தி நாமெல்லாம்
ஆற்றல் பயின்று பசுமை பற்றி
மரத்தை நாட்டி வளம் காக்க
மனித நேயத்துடன் பாதுகாக்க

சுற்றுச் சூழல் சுகாதாரம் காத்து
சந்ததி வாழ வழி வகுத்து
இயற்கையை நாம் நேசிக்க
எம் வாழ்வும் பசுமையாய் மலரும்!

Jeba Sri
Author: Jeba Sri