பட்டமரத்தில் ஒற்றைக்குருவி-68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-04-2025

பட்டமரத்தில் ஒற்றைக் குருவியின்
பரிதாபக் கதை கேட்டாயோ..
பாழாய்ப் போன குண்டுமழையால்
பட்டமரமும் விட்டதாயும் அறிவாயோ?

பச்சைக் காய்கறி கனிகளும்
பசுஞ்சோலையும் கண்டாயோ
பள்ளி சிறாரும் வீடுமாய்
பாடி திரிந்த காணியிதுவாய்

காணிக்காரன் என்தாயை
குடும்ப உறவாய் பார்த்தானல்லோ
மாம்பழம் கொத்தி தாய் உண்ண
மகிழ்ந்து ரசித்தானல்லோ

முட்டையில் வெளிவந்த எனக்கு- தாய்
முதல் சொன்ன கதையிதுவல்லோ
முத்தான காணிகாரர் எவரையும் காணீரே
முறையிடக் கேட்க யாருமில்லையே…

போனமாதம் வந்த சின்னப்பையனவன்
பேரதிர்ச்சியாய் பார்த்தான் என்னை
பேரப்பயலாய் இருப்பானோ இவன்
பெரியவரின்ர சாயலும் தெரியுதல்லோ!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading