ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பணி

ராணி சம்பந்தர்

உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்

பூரிப்பூட்டும் பருவங்கள்
வயிறும் நினைவூட்டவே
பணியிடம் தொழிலாற்றி
பதவி உழைக்கும் யோகம்

தரிப்பூட்டும் திருவுருவங்கள்
பரிவூட்டவே தொண்டுப் பணி
ஆற்றி எமைச் சீராட்டிப் பாராட்டி
மேனி வளைக்கும் ஆகமங்கள்

கழிப்பூட்டுமே புருவங்களில்
சீர் தூக்கி வேரூட்டும் பணி-
மனையாளின் பணியகமோ
கருவூட்டும் இல்லப் பணி
ஈடிணையற்ற சொல்லவே
முடியாத குடும்ப யாகமே .!

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading