பத்மலோஜினி திருச்செந்தூர்செல்வன்

வணக்கம் master🙏 வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 247

தலைப்பு — விஞ்ஞான விந்தை

விஞ்ஞானத்தின் விந்தை முடிவில்லா அண்டத்தில்
மெஞ்ஞானத்தின் அடையாளங்கள் எல்லையில்லா மதங்களில்
விபரங்களை தேடுது விண்கலன்களாய் விண்ணகத்தில்
மெய்மறக்குது மனங்களும் மனிதர்களும் விஞ்ஞானத்திடம்.

எத்தனை அறிவியல் ஆரவாரமாய் இருந்தாலும்
அத்தனையும் உதவவில்லை ஆயுளை கூட்டுவதற்கு
கூத்தனை நம்பிதான் உயிர்களும் வாழுது
அறிவியல் வளர்ந்தும் ஆண்டவனை தேடுது.

ஓருயிர் காப்பாற்ற பல்லுயிர் போகுது
இரூயிர் என்பதெல்லாம் கவிதையில் மட்டுமே
கருவினில் அழிப்பதும் விஞ்ஞான விந்தைதானே
அருவமாய் காப்பவன் இறைவன் மட்டுமே.

நன்றி வணக்கம்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
02/01/2024
London.

Nada Mohan
Author: Nada Mohan