பள்ளிப்பருவத்திலே

ஜெயம் தங்கராஜா

ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே எவரும்
பாடம் படிப்பு சோதனை இருந்தது
கூடவே குழப்படியும் நிழலாக திரிந்தது

மழைக்குள் நனைவதும் துளிகளை பிடிப்பதும்
மழைநிறைத்த கிணற்றிணை எட்டிப்பார்த்து இரசிப்பதும்
மசுக்குட்டி பயமின்றி பூவரசில் ஏறுவதும்
அதுப்பட்டு தடித்தாலும் மறுநாளும் ஏறுவதும்

பாடசாலை இறுதிமணி எப்போது அடிக்குமென
பாடங்களுள் கடைசியே அதிகமாய் பிடிக்குமென
அவ்வப்போது தண்டனைகள் கிடைத்தாலும் மறந்து
எப்போதும் போலவே சிறக்கடித்தே பறந்து

மூணு குஞ்சுக்களுடன் தாய்க்கோழியும் முத்தத்தில்
வானில் வட்டமிடும் பருந்தோ பித்ததித்தில்
முள்முருக்கை இலையினை கொக்கையால் ஒடித்து
செல்லக்குட்டி ஆட்டுக்கு படைப்பேனே விருந்து

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading