நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

பாலதேவகஜன்

அதிரடி ஆட்டம்
அனுரா காட்ட
ஆவணம் அனைத்தும்
எடுத்து நோண்ட
அமைச்சர்கள் பலரும்
வசமாய் மாட்ட
பதுக்கியவன் பதறும்
பயத்தை கூட்ட
அதிரடி ஆட்டம்
அனுரா காட்டுறார் பாரு.

வறுமையின் பிடியில்
பலரு வாழ்வு
விடிவுகளின்றி வீணாகிப்போக
மக்கள் பண்த்தில் சொகுசு வாழ்வு
கொண்டவர் அனைவரும்
தண்டனை பெற்றிட
அதிரடி ஆட்டம்
அனுரா காட்டுறார் பாரு

காணாமல் போனவர்
கதிகளை அறிந்திட
ஆவலாயிருக்கும் உறவுகள்
மனங்களில் பாலை வார்க்கும்
உம் பரிதாப வார்தை மெய்யாகிவிட்டால் போதுமே
உமை மெச்சிடும்
மனங்களோ ஏராளம்
நீங்கள் நிலையாய்
ஆள்வதும் தாராளம்.

விடிவொன்று தருவதாய்
முடிவொன்று கொண்டால்
விரைவு கொள்ளுங்கள்
அதிரடி அனுராவே!
வசதியாய் வாழும்
வாழ்வொன்று வேண்டாம்
வலியின்றி வாழும்
வாழ்வு தந்தாலே போதும்
வாழும் காலமும் போற்றுவோம்
உம் புகழும் உச்சம் பெற்றிடும்.

எம் தலைவன்
தீர்த்திடா தாகத்தை
எவர்க்கும் தீர்த்திட
அருகதை இல்லை
இனி அவர்போல் ஒருவர்
பிறப்பதும் இல்லை
புலிப்படை மீண்டும்
மலர்வதும் இல்லை.

தீர்வை நோக்கியே
நகரும் தேசியம்
திடமாய் இருந்தால் போதுமே
அதிகார பகிர்வை பெற்றாவது
வலிகளை கொஞ்சம் மறந்து
அமைதியாய் நாம் வாழ்ந்திட.

Nada Mohan
Author: Nada Mohan