தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

புதிர் 98

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026

அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது பணி
கூர்மை அறிவு கொண்டு கவனி

புரியாத புதிராய் எனக்குள்ளே
பல அத்தியாயம் என்னுள்ளே
விடை தெரிவது போலிருக்கும்
வினாவிற்குள்ளே மறைந்திருக்கும்

சிந்தனை எனும் உளியால்
சிறுகச் சிறுக செதுக்கிப் பார்
கல்லாய் இருந்த என்னுள்ளும்
கற்பனை அறிவு பெற்றிடுவாய்.

வினவியவரை புதிராய்
விடை தெரியாதவரை மர்மமாய்
தண்ணீரில் பிறப்பும் இறப்பும்
தரமானவன் சமையலுக்கு யாரிவன்?

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading